கனவுகளைச் செப்பனிட முரசறைவோம்!
பருவத்தால் எட்டிப்பார்! கண்ணால் பேசு!
பதுமையாய் வந்துசென்றால்
பசியா போகும்?
உருவத்தால் என்னவாகும்? உயிரை வாட்டும்
உள்ளத்தைத் தந்துவிடு!
நடையில் செல்வக்
கருவத்தை அணிந்ததேன்? அன்பால் என்னைக்
கட்டிக்கொள் கவிதை ஊறும்!
காலம் நன்றாய்
வருமென்று காத்திருந்தால் வயது கூடும்!
வாழ்க்கையை அறிந்துகொண்டால்
வசந்தம் வாழும்! 1
சந்திரனும் நடக்கிறதே! குளத்தை நீந்தும்
தாமரையும் சிரிக்கிறதே!
கனவு காணும்
அந்திவரும் தென்றலுக்கும் வயதாம் என்ன?
அமுதத்தை இதழாகச் செய்த
தாரோ?
செந்தமிழை நாவோடு பூசிக் கொண்டால்
செறிவான கவிதையும் இளமை
பாடும்!
பந்தான மலர்க்கொத்தின் பெயர்தான் என்ன?
பார்வையும் வியர்ப்பதேன்
கார ணஞ்சொல்? 2
முத்தினால் பற்களைச் செய்து கொண்டால்
முறுவலும் இளமையில் உறங்கும்
போலும்!
குத்திடும் பார்வையை ஊன்றிச் சென்றால்
கொடிபோன்ற மின்னென்று
சொல்வார் போலும்!
புத்தகமும் எத்தனையோ பக்கம்! ஆனால்,
புலவனின் எழுதுகோல் ஒன்று
தானே!
தத்தையாய்ச் சொற்களைக் குத்தி னாலும்
தைக்காதே இதயத்தைப் புதுமை
யாக்கு! 3
இதயங்கள் இணைந்துவிட்டால், என்ன பேசும்?
எதைப்பார்க்கும்? அவற்றுக்குக்
கண்கள் இல்லை!
உதயத்தில் நிலவிருக்கும் தென்றல் வீசும்
உரிமைக்குக் குரல்கொடுக்கும்
வாய்தான் ஊமை!
சதகோடி மலர்க்கூட்டம் விருந்து வைக்கும்
சாப்பாடு தேவையில்லை!
பசிப்ப தில்லை!
முதல்நாளில் பார்த்ததுபோல் கைக ளின்றி
முழுநாளும் அணைத்திருக்கும்,
காதல் வாழ்க! 4
எத்தனைநாள் கனவுக்குள் இருந்திட் டாலும்
இடம்மாறும் இதயத்துள்
வறுமை யில்லை!
முத்துமணி ரத்தினங்கள் தந்த போதும்
முதலில்லை! முழிப்பில்லை!
இலாபம் உண்டு!
சித்திரையில் அடிக்கின்ற வெய்யில் கூட
சில்லென்று குளிர்ந்திருக்கும்!
காதல் தேவா,
நித்திரையைக் கலைக்காதே! இதயந் தேடும்
நெடுவானம் சிறக்கட்டும்!
இன்பம் வாழ்க! 5
நீதிக்குச் சேதி சொல்வோம்! நமக்குள் எந்த
நியாயமும் புகவேண்டாம்!
தனிமை வேண்டும்
ஆதிக்கச் சிறைக்குள்ளே அடிமை யாவோம்!
ஆனந்தம் காவலாய் இருந்தி
டட்டும்!
சதிக்க வேண்டாம்,நாம்! நீயும் நானும்
சரியாவோம்! வாழ்க்கையை
ஆய்வு செய்வோம்!
பாதித்த கனவுகளைச் செப்ப னிட்டுப்
பழந்தமிழர் பண்பாட்டு
முரச றைவோம்!. 6
1 comment:
good it is amazing !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment